தடுப்பூசிக்கு பயந்து இப்படியெல்லாம் பண்ணுவாங்களா!
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது.
ஆனால், மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சம் அதிக அளவில் உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் பாராபங்கி எனும் கிராமத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்து பொதுமக்கள் சராயு நதியில் குதித்து ஓடியுள்ளனர்.
தடுப்பூசி குறித்து வதந்தி பரவியதே இதற்கு காரணம் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.