யாராக இருந்தாலும் இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதியில்லை! அரசு அதிரடி

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் ஒரு வார காலத்திற்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்குச் சரியாக சென்று சேர்வதற்காக நடமாடும் அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் வழக்கம் போல பார்சல் வசதி மட்டுமே அனுமதி உள்ளது. Swiggy, Zomato போன்ற நிறுவனங்களிலும் பார்சல் சேவைகளுக்கு அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், தொழிற்சாலை பணிகளுக்குச் செல்பவர்களும் இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களை அழைத்துச் செல்ல தொழிற்சாலைகளைச் சேர்ந்த 4 சக்கர வாகனங்களை அனுப்ப வேண்டும் எனவும், அந்தப் வாகனங்களுக்கும் இ-பதிவு கட்டாயம் என அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *