தேசத்துடன் துணைநிற்கும் பிசிசிஐ!
நாட்டில் தினசரிக் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு பலரும் உதவி செய்து வருகிறார்கள். வெளிநாடுகளிலிருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று பிசிசிஐ இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூ்டடிகளை வழங்க இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் மருத்துவத்துறைக்கு துணை நிற்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இந்தக் கடினமான காலக்கட்டத்தில் தேசத்துடன் துணை நிற்கும் விதமாக ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உதவும். அதன்படி 10 லிட்டர் திறன் கொண்ட 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ வழங்கும் என தெரிவித்துள்ளார்.