தமிழ்நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்க மனித உரிமைகள் தலைவர்!
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப் பட்டுள்ளன.
கொரோனாவில் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது அமெரிக்க அரசு.
அமெரிக்காவின் மனித உரிமைகள் தலைவர் ஜெஸி ஜாக்சன் தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுடன் ஜூம் அழைப்பில் பேசினார்.
அப்போது தமிழகத்திற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாக ஜெஸி ஜாக்சன் தெரிவித்தார்.
மேலும், ஜெஸி ஜாக்சன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் 80 மில்லியன் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிகளில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஸி ஜாக்சன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு உதவி வந்து கொண்டிருக்கிறது எனவும், நீங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்க உங்களுடன் துணைநிற்கும் நாம் ஒன்றாக இணைந்து கொரோனாவை வெல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.