சைதாப்பேட்டையில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதையடுத்து தமிழக அரசு கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் கொரானா குறித்து மையம் ஒன்றை தமிழக அரசு திறந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 130 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
தனியார் நிதியுதவியுடன் திறக்கப்பட்ட இந்த சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.