120 வயதான பாட்டிக்கு உள்ள நம்பிக்கை, நம்மில் பலருக்கு இல்லை….என்னவா இருக்கும்!

கொரோனா பரவல் உலக நாடுகள் அனைத்தையும் புரட்டி எடுத்து வருகிறது.

கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே தீர்வு என பல மருத்துவ வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் நம்மில் பலருக்கும் ஒருவித தயக்கம் உள்ளது.

ஆனால், காஷ்மீரைச் சேர்ந்த 120 வயதான பாட்டி ஒருவரின் செயல் அனைவருக்கும் தடுப்பூசி மீதான நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உதம்பூர் மாநிலத்தில் உள்ள கட்டியாஸ் கிராமத்தை சேர்ந்த 120 வயதான தோலி தேவி என்பவர் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். 

கொரோனாவை வெல்ல தடுப்பூசி தான் ஒரே தீர்வு. அதனால் தான் தடுப்பூசி நான் செலுத்திக் கொண்டேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அது பாதுகாப்பானதும் கூட. நானே தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது உங்களுக்கு என்ன? தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு எந்த பக்கவிளைவுகளையும் நான் எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார் அவர். 

மூதாட்டியின் இந்த செயல் பலருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், எந்த வித தயக்கமும் இன்றி தடுப்பூசி செலுத்தி கொண்டதற்காக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *