மாற்றுத் திறனாளிகளுக்குத் தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்லும் போது, அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்குவதற்காக, சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, இன்று சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த முகாமில் முதற்கட்டமாக 25 மாற்றுத் திறனாளிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.