சற்றே குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகிறது. மேலும், பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதிப்பு விகிதம் கொஞ்சம் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,2,57,299 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,4,194 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து,தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,62,89,290 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,95,525 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில்,கடந்த ஒரே நாளில் 3,57,630 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.எனவே,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,30,70,365 ஆகும்.மேலும்,31,29,878 பேர் கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *