ஸ்மார்ட் மாஸ்க் உருவாக்கி அசத்திய கேரள இளைஞர்!
கொரோனா பரவல் நாடு முழுவதும்தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் மிக முக்கியமானதாக முகக் கவசம் அணிவது பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளும் மற்றும் உலக சுகாதார நிறுவனமும் தொடர்ந்து முகக் கவசம் அணிவதின் பயனை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் நம்மில் பலரும் முகக் கவசம் அணியும்போது அதனை சரியாக அணிவது கிடையாது. முக கவசம் அணியும் போது வாய் மற்றும் மூக்கு பகுதி நன்றாக முக கவசத்தால் மூடி இருக்க வேண்டும். ஆனால் நாம் பிறரிடம் பேசும்போது முக கவசத்தை கழட்டி விடுவது இல்லையெனில் முகக் கவசத்தை இறக்கி விட்டு பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறோம்.
இதற்கு தீர்வு காணும் விதமாக 19 வயது நிரம்பிய கேரள இளைஞர் கெவின் ஜாக்கப் ஸ்மார்ட் மாஸ்க் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இந்த மாஸ்க்-ல் மைக்கும், முக கவசம் அணியும் போது உபயோகிக்கும் ஃபேஸ்சில்டு-ல் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒருவர் பேசுவது சரியாக கேட்கவில்லை எனக் கூறி முகக் கவசத்தை கழற்றி விட்டு பேசுவது குறையும்.
மேலும், மாஸ்க்-ல் மைக் பொருத்தப்பட்டுள்ளதால் ஒருவர் பேசும் பொழுது சத்தமாக பேச வேண்டிய அவசியமில்லை.
இந்த ஸ்மார்ட் மாஸ்க்கை தனது பெற்றோருக்காக கெவின் ஜாக்கப் உருவாக்கியுள்ளார்.
இதனை வணிக ரீதியில் உருவாக்க விரும்பினால் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் கெவின் தெரிவித்துள்ளார்.