முகக் கவசம் அணிய கூடவா கிளாஸ் எடுக்கணும்….கவலையில் மத்திய அரசு!

நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முகக் கவசம் அணிவது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் முகக் கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

நாட்டில் 50 சதவீத மக்கள் முகக் கவசம் அணிவதே இல்லை. 64 சதவீதம் பேர் முகக் கவசத்தினால் வாயை மட்டுமே மூடுகின்றனர், மூக்கினை அவர்கள் மூடுவதே இல்லை. மேலும், 2 சதவீதம் பேர் முக கவசத்தினை கழுத்தில் அணிகின்றனர்.

நாட்டில் 14 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசத்தினை சரியாக அணிகின்றனர் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *