கொரோனா தொற்றால் காலமான மக்கள் மருத்துவர்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெருந் தொற்றினால் பலரும் இறந்து வருகின்றனர்.
இதில் வேதனை அளிக்கக்கூடிய உண்மை என்னவென்றால் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பலரும் அத்தொற்றுக்கு ஆளாகி தங்கள் உயிரை தியாகம் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் வட சென்னையில் மக்கள் மருத்துவர் என அழைக்கப்படும் மருத்துவர் பார்த்தசாரதி பெருந்தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வட சென்னையில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக பார்த்தசாரதி குறைந்த விலையில் மருத்துவம் அளித்து வந்தார். அவரது இந்த திடீர் மறைவு வட சென்னை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.