விதிமுறையை மீறிய மலையாள பிக்பாஸ்! பாதியில் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. 95 நாட்களை கடந்து அந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், ஜூன் 6ஆம் தேதி ஃபைனல்ஸ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 8 பேர் வீட்டில் இருக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனாலும், தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டு தான் இருந்தது. இதை அறிந்த பூந்தமல்லி காவல் துறை உதவி ஆணையர் சுதர்சன், வட்டாட்சியர் சங்கர் ஆகியோர் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று நேற்று விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்திலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவதை அறிந்து அரங்கின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வீட்டின் உள்ளே இருந்த போட்டியாளர்களும், ஊழியர்களும் கொரோனா கவச உடை பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.
பின், பிக்பாஸ் அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால், இறுதிகட்டத்தை எட்டிய நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.