ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மே 22ல் முதல்வரின் தலைமையில் ஆலோசனை
தமிழகத்தில், அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. மேலும், அனைத்து கட்சியினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்பதற்காக 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? இல்லை மேலும் சில தளர்வுகள் வழங்கலாமா? என்பது குறித்து, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில், கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.