இந்தியாவின் பறக்கும் மனிதருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவின் பறக்கும் மனிதர் என அழைக்கப்படும் மில்கா சிங்குக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவரது வீட்டில் பணிபுரியும் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில் அவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மில்கா சிங்குக்கு தற்போது தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்று உறுதியான நிலையில் அவர் தன்னை சண்டிகரில் உள்ள வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகளில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமைக்கு மில்கா சொந்தக்காரர். இவர் பிறந்தது ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த கோவிந்த்புராவில். இப்போது அது பாகிஸ்தானில் உள்ளது. 

ராணுவ வீரரான அவர் அங்கிருந்து தான் தனது தடகள ஓட்டத்தை தொடங்கினார். அவரது வாழ்க்கை இந்தி மொழியில் ‘பாக் மில்கா பாக்’ என்ற பெயரில் திறப்படமாக உருவாகி வெளியானதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *