கொரோனாவிற்கே புகை போடும் பாஜக நிர்வாகி!

இந்தியாவில், பரவி வரும் கொரோனாவைத் தடுக்க மருத்துவர்கள் தடுப்பூசிகளுடன் போராடி வருகின்றனர். ஆனால், வட மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் கொரோனாவை ஒரு தொற்று நோயாகக் கருதவில்லை போல.

கொரோனாவிற்கு 18 வயதை மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வரும் நிலையில், இவர்கள் மட்டும் தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

சாணம், கோமியத்தை கலந்து உடலில் பூசி யோகாசனம் செய்து பாலில் குளித்தால் கொரோனா பயந்து ஓடி விடும் என நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்படி செய்வதால் கொரோனா போக்காது, வேறி சில நோய்கள் தான் பாதிக்க வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சிலும், சுகாதாரத் துறையும் எச்சரித்துள்ளது.

இதற்கு இன்னும் மேலே போய் புகையைப் போட்டே கொரோனாவை விரட்ட, மீரட் பாஜக தலைவர் கோபால் சர்மா முயன்று வருகிறார். உத்திரப்பிரதேசம் மீரட்டில் மாட்டு சாணம், பசுவின் நெய், மா மரத்தின் தண்டுகளை கற்பூரம் கொண்டு எரித்து, சங்கு ஊதியபடியே புகையை வீதியெங்கும் பரப்பி கொரோனாவைக் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஹவன் புகை என பெயரும் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *