சென்னையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளது – சுகாதாரத் துறை செயலாளர்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிகபட்சமாக அண்ணாநகரில் 5270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தேனாம்பேட்டையில் 4096பேருக்கும், அம்பத்தூரில் 4,359பேருக்கும், திருவிக நகரில் 3791 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், ”சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது” என, தெரிவித்துள்ளார்.