கருப்பு பூஞ்சை தொற்றை, பெருந்தொற்றாக மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் -மத்திய அரசு கடிதம்
கருப்பு பூஞ்சை எனப்படும் முகோர்மைகோஸிஸை, பெருந்தொற்று நோயாக அனைத்து மாநிலங்களும் அறிவிக்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சமீப காலமாக புதிதாக ஒரு பூஞ்சை தொற்று அதிகமாக பரவிவருகிறது. முகோர்மையோஸிஸ் எனப்படும் அந்த தொற்று, கருப்பு பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து முகோர்மையோஸிஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா நேரத்தில் இந்த வைரஸ் பரவுவதால், புதிதாக நிறைய சவால்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தொற்று, மிகத்தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஸ்டீராய்டு தெரபி மூலம் அதிகப்படியான ஸ்டீராய்டு தரப்பட்டபவர்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.