நேரடியாக களத்தில் இறங்கும் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கு தமிழ்நாடு அரசும் பல முயற்சிகளை எடுத்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.
தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் நாளை முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
அதன்படி, நாளை(19.5.2021) சேலம், கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்த்இலும், நாளை மறுநாள் (20.5.2021) மதுரை மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “மாஸ்க் அணியுங்கள்; தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம். முகக்கவசம் மனிதர்களுக்கு உயிர் கவசம் ஆக மாறியுள்ளது.
அனைவரும் அதை அணிய வேண்டும்.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டபுள் மாஸ்க் போடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆலைகள், பேருந்துகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் இருக்கும்போது டபுள் மாஸ்க் போட்டு கொள்வது நல்லது” என, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.