கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவித்த இந்திய மாநிலம்!

இந்தியாவில் கொரோனா பரவல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் எனப்படும் புதிய வகை நோய் ஒன்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவுக்கான சிகிச்சைகளில் அதிகப்படியாக ஸ்ட்ரீயாடு மருந்துகள் கொடுப்பதால் இந்த கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக ராஜஸ்தான் மாநிலம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெய்ப்பூர் பகுதியிலுள்ள மருத்துவமனையொன்றில் 100 நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நோயின் தீவிரம் அதிகரித்துள்ளதால் இதனை பெருந்தொற்றாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அகில் அரோரா அறிவித்திருக்கிறார்.
இந்த நோய் சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் பரவுவது குறிப்பிடத்தக்கது.