ஆம்புலன்ஸில் சைரன் ஒலி பயன்படுத்த வேண்டாம்… மணிப்பூர் அரசு உத்தரவு!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அவசர ஊர்தியான ஆம்புலன்சின் தேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இந்த அவசர ஊர்தி தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை மணிப்பூர் அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
அதன்படி ஆம்புலன்சில் மேலுள்ள சைரனை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது. சைரன் ஒலி இந்த கொரோனா சூழலில் மக்களுக்கு தேவையில்லாத அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்போது மட்டும் இந்த சைரனை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.