என்னை சந்திக்க முயற்சிக்காதீர்கள்…முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக-வினருக்கு புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளின்போது திமுக-வினர் என்னை சந்திக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் என்னை வரவேற்பதாக நினைத்து கட்சிப் பதாகைகள் எதுவும் வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலம், திருப்பூர், கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளதையடுத்து இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.