கொரோனாவிலிருந்து மீண்ட கிரிக்கெட் வீரர்கள்!

இந்தியாவில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் முறையான கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி 14 ஆவது ஐபிஎல் தொடர் நடைபெற்றது.

ஆனால், தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, பல வீரர்களுக்குக் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று தொற்று பாதித்த வீரர்கள் தங்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தனர்.

தொடர்ந்து, தொற்று பாதித்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமானதால், ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக மே 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதே நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ராவுக்கும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மே 8 அன்று, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதனால், அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வந்தனர். இந்நிலையில், ட்விட்டரில் சாஹா, “நான் மீண்டுவிட்டேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி” என்று சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அமித் மிஷ்ரா, “உண்மையான நாயகர்கள் நமது முன்களப் பணியாளர்கள். தொற்றிலிருந்து மீண்ட பிறகு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்களுக்கு எனது ஆதரவு, மனமார்ந்த பாராட்டும் உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் செய்து வரும் தியாகங்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம்” என பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *