18 வயதுதை மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி!
தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 45 வயதை மேற்பட்டவர்களுக்கு கொரோனாவிற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது.
பின், மே 2 ஆம் தேதி முதல் 18 வயதை மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் குறித்த நேரத்தில், 18 வயதை மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் போனது.
இந்நிலையில், நாளை(20.5.2021) முதல் 18 வயதை மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆக்ஸிஜன் உதவி பெறும் வகையில் நடமாடும் ஆக்ஸிஜன் வாகனங்களை,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது போக போகத்தான் தெரியும்.எனினும்,கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு மட்டுமே தீர்வாக உள்ளது.ஏனெனில்,முழு ஊரடங்குக்கு முன்னால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.
ஆனால்,ஊரடங்குக்கு பிறகு, தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக,சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல்,78 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது.அதில் 69 லட்சம் தடுப்பூசிகள் ஏற்கனவே போடப்பட்டுள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில்,18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட,மாநில சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தப்பட்டு,அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளது.எனவே,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தமிழக முதல்வர் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைப்பார்.அதில்,ஆட்டோ டிரைவர், ஆலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்” என, தெரிவித்துள்ளார்.