18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம்….முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகப் படுத்தப்பட்டுள்ளது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் நாளை மறுநாள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால் கொரோனா முழுமையாக ஒழிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.