இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் செலுத்த இன்னும் 3 ஆண்டுகளாகும்… இன்னும் மூணு ஆண்டுகளா முடியலடா சாமி!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. மத்திய,மாநில அரசுகள் எத்தனை கட்டுப்பாடுகளை விதித்தாலும், கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவது நோய் பரவலைத் தடுப்பதற்கு முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
மத்திய,மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளைமுடுக்கி விட்ட போதிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கே இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்தால் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஒரு சில ஆண்டுகள் ஆகலாம்.
இந்நிலையில் இன்று இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என சீரம் நிறுவனத் தலைவர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 அல்லது 3 மாதங்களில் தடுப்பூசி செலுத்துவது என்பது முடியாத காரியம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் நிறைய சவால்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.