கொரோனா பாதித்தவர் வெளியே வந்தால் அபராதம்…மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தும் தினசரி கொரோனா பாதிப்பு குறைவதாக தெரிவதில்லை.
கொரோனாவை கட்டுக்குள் வைக்க தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்றும் புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீண்டும் மீண்டும் மீறினால், மீறுபவர்களை கொரோனா முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்தப் புதிய உத்தரவினால் கொரோனா பரவலை ஓரளவிற்கு கட்டுக்குள் வைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.