இ-பதிவு விண்ணப்பத்தில் திருமணத்திற்கு மீண்டும் அனுமதி!

தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, மாவட்டங்களுக்கு உள்ளும் வெளியிலும் செல்வதற்கு இ-பதிவு முறை நேற்று (17.5.2021) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இ-பதிவு விண்ணப்பத்தில் திருமணத்திற்கான பிரிவி திடீரென நீக்கப்பட்டிருந்தது. ”திருமணம் என்பதைப் பயன்படுத்தி பலர் தவறாக வெளியில் சென்றுவருகின்றனர். அதனால் தான் அப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உண்மையாக திருமணத்திற்கு அனுமதி பெற காத்திருப்போர் இதனால் கடும் அவதியுற்றனர். திருமணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத் தொரட்ர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இ-பதிவு விண்ணப்பத்தில் திருமணத்திற்கான பிரிவிற்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.