கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் பாகுபாடு….உலக சுகாதார நிறுவனம் வேதனை!
கொரோனாவிற்கான தடுப்பூசிகளை விநியோகிப்பதில் முன்னேற்றமடைந்த நாடுகள் மற்றும் பின்தங்கியுள்ள நாடுகள் அவற்றிற்கிடையே பாகுபாடு காணப்படுவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் அதானம் கேப்ரிசியஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக முன்னோக்கி இருக்கும் நாடுகள் மற்றும் ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கொண்டிருக்கும் நாடுகளுக்கான தடுப்பூசி விநியோகம் பற்றி பேசுகையில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர்,
நிறவெறி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் தடுப்பூசி விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் அப்படியானவொரு மோசமான நிலைப்பாட்டில் இருக்கிறது. தரவுகளுடன் சொல்லவேண்டுமென்றால், உலகில் தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளில், 45 சதவிகித தடுப்பூசியை உலகில் 15 சதவிகித மக்களை மட்டுமே தன்னகத்தே கொண்டிருக்கும் பணக்கார நாடுகள் வைத்துள்ளன. மக்கள் தொகையில் 50 சதவிகித மக்களைகொண்டிருக்கும் ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கொண்டிருக்கும் நாடுகளுக்கு 17 சதவிகித தடுப்பூசிகளே கிடைத்துள்ளது எனக்கூறியுள்ளார்.