ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரத்தை கண்டுபிடித்து அசத்திய அரக்கோணம் இளைஞர்கள்!
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மிகவும் இன்றியமையாததாக மாறியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
குறைந்த செலவில் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்த நரேஷ் மற்றும் அனீஸ் மேத்யூ அதனை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த இயந்திரத்தின் அனுமதிக்காக இருவரும் காத்திருக்கின்றனர்.
இந்த இயந்திரத்தின் மூலம் 40 ஆயிரம் செலவில் ஒரு நிமிடத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இயந்திரத்திற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.