விமான சேவையை ரத்து செய்ய டெல்லி முதல்வர் வேண்டுகோள்!
கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமானப் போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டுமென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிப்பதாக உள்ளதால் இந்த வேண்டுகோள் முன் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.