இந்தப் பிரிவை இ-பதிவு முறையிலிருந்து நீக்கியதற்கான காரணம் என்ன?

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கின் போது பலரும் பொய்யான காரணங்களைக் கூறி வெளியில் சுற்றி வருகின்றனர்.

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது அரசிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி உள்ளது.

அதன்படி இன்று முதல் வீட்டை விட்டு வெளியில் செல்வோருக்கு இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இ-பதிவுகளில் திருமணம், இறப்பு, மருத்துவம் என பல பிரிவுகள் உள்ளன.

அதில் திருமணம் என்ற பிரிவை தமிழக அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. பலரும் திருமணம் என்று கூறி இ-பதிவு முறையை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் கொரோனாவை கட்டுபடுத்துவது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஆகையால் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *