கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் கோவில் மண்டபங்கள்!

ஆந்திராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து ஆந்திர அரசு ஊரடங்கு உத்தரவை மே மாத இறுதிவரை நீட்டித்துள்ளது.
நாளொன்றுக்கு இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைப் படுக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 16 பெரிய கோவில் மண்டபங்கள் அனைத்தும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக மாற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மருத்துவப் படுக்கைகளுக்கான தேவை ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.