அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மையம் அமைக்க முன்வந்துள்ள நிறுவனங்கள்!

தமிழகத்தில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தமிழக அரசு ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி செய்வதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மையங்கள் அமைக்க சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க NLC, Hyundai Glovis, saint gobin, L &
T,TVS, PayTM, Daimler , உள்ளிட்ட நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் தேவையினை பூர்த்தி செய்வது உறுதி செய்யப்படும்.