கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊடகங்களின் பங்கும் அவசியம் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பத்திரிக்கை மற்றும் செய்தி தொலைக்காட்சி ஆசிரியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊடகத்தின் பங்கு எப்படி என எடுத்துரைத்தார்.
அந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:
”தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது.
பொதுமக்களின் உயிர்காக்கும் பணியில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
நோய்த்தொற்றை தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது ஆகியவை தான் அரசின் இரு முக்கிய கடமையாக உள்ளது.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
ஒத்துழைப்பு தருவதற்கு முதலில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு காட்சி ஊடகங்களின் பங்களிப்பு தேவை
நோய்ப் பரவலின் சங்கிலியை உடைக்கவே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் சிலர் விதிமீறி ஊர்சுற்றி வருகின்றனர்.
ஆக்ஸிஜன் வசதி, தடுப்பூசி, சிகிச்சை ஆகியவை தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் வாங்கவும், காலி சிலிண்டர்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூடுதல் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை.
பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வார் ரூம் திறக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை, ஆய்வுப் பணிகளை மேற்பார்வையிடும் பணியில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து தரப்பினரையும் பெருந்தொற்றில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், ஊடகங்களின் ஒத்துழைப்பு தேவை.
அரசின் முயற்சிகளை ஊடகங்கள் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும்.
இது அரசியல் அல்ல.
நோய்த்தொற்று தடுப்பு பணி.
நோய்த்தொற்று தடுப்பு பணியில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது.
நோய்த்தொற்று தொடர்பான முழு உண்மைகள் கடந்த காலத்தில் வெளியாகவில்லை.
இப்போது தான் முழு உண்மைகள் வெளியாகி வருகிறது.
செய்திகளை முந்தித்தருகிறோம் என்ற பெயரில், தவறான செய்திகளை வெளியிடக்கூடாது.
ஊடகங்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்.
அரசுக்கு ஊடகங்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.
மக்களுக்கு ஊடகங்கள் வழிகாட்ட வேண்டும்.
அரசின் செய்திகளை முழுமையாக வெளியிட வேண்டும்.
ஏதேனும் தேவை இருப்பின், அதை தயங்காமல் அரசிடம் தெரிவிக்கலாம்.
சரியாக முகக் கவசம் அணிவதை உறுதி செய்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல் போன்றவை தொடர்பாக ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.
அரசின் நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள், பொது மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தந்தால் விரைவில் நோய்த்தொற்றில் இருந்து விடுபடலாம்”. என்று பேசியுள்ளார்.