முதியோருக்கான கட்டணமில்லா ஹெல்ப்லைன் தொடக்கம்!
கொரோனா இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. பெருந்தொற்றால் முதியோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியா முழுவதும் உள்ள முதியவர்களுக்கு உதவும் பொருட்டு கட்டணமில்லா ஹெல்ப்லைன் சேவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சமூக நீதி அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இந்த சேவை அண்மையில் தமிழகம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தெலுங்கானாவில் இந்த சேவை ஒரு வருடத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது.
மேலும் இந்த சேவையை 2021 மே மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு மையங்களை கட்டணமில்லா எண் 14567 மூலம் தொடர்பு கொள்ளலாம். தேவையுள்ள அனைத்து பெரியவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த எல்டர் லைன் எனும் வசதி , டாடா டிரஸ்ட் மற்றும் என்எஸ்இ அறக்கட்டளையின் உதவியுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதியன்று இந்த எல்டர்லைன் உதவி எண் வசதி தொடங்கப்பட்டுள்ளது.