முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கும் ஆச்சி மசாலா நிறுவனம்!
கொரோனா பரவலை எதிர்கொள்வதற்கு அனைவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து பலரும் தங்களது பங்களிப்பினை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆச்சி மசாலா நிறுவனம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கியுள்ளது.
இந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை ஆச்சி மசாலா நிறுவன தலைவர் பத்மசிங் ஐசக் முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினார்.