8 மருத்துவ கல்லூரி முதல்வர்களை மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு!

8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி அதிரடி உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இம் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் கல்லூரியின் டீன்களாகவும் செயல்படுவர் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்டவர்கள் விவரம்:

  1. மருத்துவக் கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மாற்றப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிக விமர்சனங்களுக்கு உட்பட்ட கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பணிபுரிந்த தற்போது மாற்றப்பட்டு உள்ளார். பத்திரிக்கைகளில் செய்தி வெளியான நிலையில் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவத்தில் ரத்தப்போக்கு அதிகமாக நிலையில் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவமனை நிர்வாகி மகன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதால் உறவினர்களிடம் எந்த தகவலின் தெரிவிக்காமல் ரகசியமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று இறந்த நிலையில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி காவல் துறையில் புகார் அளித்து நிலுவையில் இருந்தது. மேலும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கடந்த முதல் நோய்த்தொற்று காலத்தில் செய்திகள் வெளியானதும் அதன் பின்னர் தற்போது உயிரிழந்தவர்களின் உடல் உறவினரிடம் ஒப்படைக்க மாநகராட்சி ஊழியர் ஒருவர் பணம் வாங்கி ஊழலில் ஈடுப்பட்டதாகவும் உயிரிழந்த உடலை மாற்றிக் கொடுத்த குற்றச்சாட்டுக்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில் தற்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *