ஆக்சிஜன் சிலிண்டரை தமிழகம் கொண்டுவர இரண்டு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் தினசரிக் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரவழைக்க படுகின்றன.
அவ்வாறு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வர வைப்பதை கண்காணிக்க 2 அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது.
ஒடிசா மாநிலம் கலிங்கா நகர் lமற்றும் ரூர்கேலாவிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழகம் கொண்டு வருவதற்காக 2 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி (இந்திய வன பாதுகாப்பாளர்) மற்றும் சென்னையைச் சேர்ந்த நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு அதிகாரி புவனேஸ்வரிலும், மற்றொருவர் ரூர்கேலாவிலும் 2 வாரங்கள் தங்கி இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.