ரெம்டெசிவிரால் எந்த ஒரு பயனும் இல்லை….உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான போரில் போராடி வருகின்றனர்.
இதுவரை தடுப்பூசி ஒன்றே கொரோனாவிற்கு தற்காலிக தீர்வாக பார்க்கப்படுகிறது. மேலும் பெருந் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தாக பார்க்கப்படுகிறது.
இதனால் மருத்துவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்தையே பரிந்துரைக்கின்றனர்.
இதனால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த மருந்திற்காக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
மருந்தினைப் பெற வருவோர் எந்த ஒரு கொரோனா விதிமுறைகளையும் சரிவர கடைபிடிப்பதில்லை. இதுவே நோய் பரவலுக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.
இந்நிலையில் இன்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் ரெம்டெசிவர் மருந்தினால் எந்த ஒரு பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமே தவிர நோயினை முழுமையாக குணப்படுத்த பயன்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தினால் மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறையுமே தவிர வேறொன்றும் பெரிதாக பயனில்லை எனவும் அவர் கூறினார்.