இனி இவர்களும் முன் களப்பணியாளர்கள் தான்…. குஜராத்தை தொடர்ந்து தமிழகமும் அறிவித்தது!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்கள பணியாளர்களின் பங்கு அளப்பரியது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையில் பணிபுரிபவர்கள் என அனைவரும் முன்களப் பணியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

தற்போது இவர்களுடன் மயானத்தில் வேலை பார்ப்பவர்களும் முன் களப் பணியாளர்கள் தான் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் முன் களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

இது போல் மயானத்தில் பணிபுரிபவர்களை முன்களப் பணியாளர்களாக குஜராத் மாநிலம் அங்கீகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…