கொரோனாவையே சமாளிக்க முடியல, இதுல இன்னொரு நோயா!

கொரோனா பரவல் நாட்டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்று திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் புதிதாக இன்னொரு பிரச்சினை கிளம்பி இருக்கிறது.
இந்தியாவில் புதிதாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கு இந்தப் புதிய நோய் மேலும் தலைவலியாக உள்ளது.
இந்த கறுப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக ஹரியானா மாநில அரசு வகைப்படுத்தியுள்ளது.
அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிடுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்து அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
இன்று இந்தக் கருப்பு பூஞ்சை நோய் தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் அறிவித்தார்.