கொரோனா இரண்டாவது அலைக்கு மோடியே காரணம்… சீதாராம் யெச்சூரி கடும் தாக்கு!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட முழுக்க முழுக்க காரணம் பிரதமர் மோடி தான் என சீதாராம் யெச்சூரி கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் 6 முறை இரண்டாவது அலை குறித்து பிரதமர் எச்சரித்தார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இரண்டாவது அலை குறித்து கவலை பிரதமருக்கு உண்மையாக இருந்திருக்குமானால்,
ஏன் கும்பமேளா அனுமதிக்கப்பட்டது?
ஏன் ஏப்ரல் வரை அனைவருக்கும் தடுப்பூசி கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை?
ஏன் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அதிகப்படுத்தப்படவில்லை?
ஏன் பிரதமர் மெகா பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்?
என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரச்சனையின் இறுதி பொறுப்புதாரி நீங்கள்தான் பிரதமர் அவர்களே! மற்றவர்கள் மீது பழிபோடாதீர்கள் என டிவிட்டரில் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.