ஊரடங்கு விதியை மீறினால் இப்படியும் தண்டனை கொடுக்கலாமா…. இது என்னடா புது டிரெண்டா இருக்கு!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனையடுத்து மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் யாரேனும் வெளியில் சுற்றினால் அவர்களை காவல்துறை கண்டித்து வீட்டுக்கு அனுப்புகிறது. மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தும் வருகின்றனர்.

சில நேரங்களில் ஊரடங்கு விதியை மீறுபவர்கள் இடம் காவல்துறை கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கின் போது வெளியே வரும் மக்களை அடிக்க வேண்டாம் என்று கர்நாடக நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவையடுத்து காவல்துறையினர் ஊரடங்கு விதிகளை மீறுவோர்களை நூதன முறையில் தண்டித்து வருகின்றனர். ஊரடங்கு விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் வந்த சிலரை வரிசையாக நிறுத்தி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து நூதன முறையில் காவல்துறையினர் அவர்களை கண்டித்து அனுப்பினர்.

மேலும் அவர்களின் இந்த நூதன தண்டனையை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக போலீசின் இந்த தண்டனை ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றுக்கு புது டிரெண்டில் வழங்கப்படும் நூதன தண்டனையாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *