ஊரடங்கை நீட்டிக்கும் மாநிலங்கள்!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.
முழு ஊரடங்கு பிறப்பித்தும் நோய் தொற்று குறையாமல் இருப்பதால் ஊரடங்கு காலத்தை இந்தியாவின் பல மாநிலங்களும் நீட்டித்து உள்ளன.
ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை வரும் 26 -ம் தேதி வரை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்திலும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களிலும் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.