புதிதாக பணியமர்த்தப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்….சுகாதாரதத் துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இதனையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக 10 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள் மற்றும் 2 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சேலம் இரும்பாலையில் வரும் 25 ஆம் தேதிக்குள் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *