யாரும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வர வேண்டாம்!

தமிழகத்தில் வேகமெடுத்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. ஊரடங்கில் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பொதுமக்கள் பலர் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றாததால் ஊரடங்கில் இருந்த தளர்வுகள் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 10 வரை தான் அத்தியாவசியத் தேவைக்கான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், கோயம்பேடு மார்க்கெட்டும் 10 மணி வரை தான் செயல்படும். இதுகுறித்து, அங்காடி நிர்வாகக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக அரசு உத்தரவுப்படி, காலை 10 மணி வரை தான் கடைகள் இயங்கும். இதனால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க பொது மக்கள் யாரும் கடைகளுக்கு யாரும் வர வேண்டாம். வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.