தந்தையை இழந்திருந்தாலும் நெகிழ வைத்த சிறுமி!

தமிழத்தில் கொரோனா காலத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க பொதுமக்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவிற்கு நிவாரணம் வழங்குமாறு தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து, பலரும் தங்களால் முடிந்த அளவிற்கு நிவாரணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால், சிலரின் நிவாரணம் மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
கோவில்பட்டியில் உள்ள ரிதானா என்ற சிறுமி தன் தந்தையின் மருத்துவச்செலவுகளுக்காக சிறு தொகையை சேமித்து வைத்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக தந்தை மாரடைப்பால் இறந்து விட்டதால், தான் சேர்த்து வைத்த 1970 ரூபாய் பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.
திமுக எம்.பி கனிமொழியிடம் நேரடியாக நிவாரணத்தை அளித்துள்ளார் சிறுமி ரிதானா. இதனை கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.