மதுரையில் ஜீரோ டிளே படுக்கை வசதிகள்…சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலருக்கு போதிய மருத்துவமனை படுக்கை வசதிகள் கிடைப்பதில்லை. இதற்கு முக்கியக் காரணம் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகும் தொற்று எண்ணிக்கையே ஆகும்.
இந்நிலையில் இன்று மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனை படுக்கை வசதி குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுரை அரசு மருத்துவமனையில் ஜீரோ டிளே அடிப்படையில் 150 புதிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தோப்பூரில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகள் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.