இயந்திரக் கோளாறால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்

இந்தியாவில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, அங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டு லாரிகளில் ஆக்ஸிஜன் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட்டது. இ
இந்நிலையில், நேற்று இரவு திடீரென ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக ஆலை செயல்படாமல் உள்ளதால் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தக் கோளாறை சரிசெய்ய மூன்று நாட்கள் ஆகும் என்பதால் அதன் பின்னரே ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.