எனக்கு மீண்டும் கொரோனாவா….வருத்தத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!

ஐபிஎல் 14-வது சீசன் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஐபிஎல்-ல் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கடுமையான பயோ பபுள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர்.

இருப்பினும் ஐபிஎல்-ல் விளையாடும் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹாவும் ஒருவர்.

வீரர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் ஒன்றில் தொற்று இல்லை என்றும், மற்றொரு சோதனையில் பாதிப்பு உள்ளது என்றும் ரிப்போர்ட் வந்துள்ளது.
அதனால் தொடர்ந்து சமூகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *